வியாழன், 12 டிசம்பர், 2019

நற்றிணை - அறிமுகம்

நற்றிணை என்றால் நல்ல ஒழுக்கம் என்று பொருள். மொத்தம் 400 பாடல்கள். இதன் பாடல்கள் பல்வேறு யாப்பிலக்கண வகைகளை சார்ந்தது. நற்றிணை மூன்றாம் சங்க காலத்தைச் சேர்ந்தது. இதன் காலம் கி.மு. 300 இருந்து கி.பி. 200 வரை.

இது ஒரு தொகுக்கப்பட்ட நூல். தொகுக்கப்பட்டது (collected and arranged) என்பது ஒரு முக்கியமான தகவல். பாடல்கள் பலரால் எழுதப்பட்டு பல காலங்களுக்கு பிறகு, ஒருவரால் தொகுக்கப்பட்டது. இதனால் எழுதப்பட்ட காலம் மேலும் பின்னோக்கிச் செல்கிறது.

நற்றிணை தொகுக்கப்பட்ட காலத்தின் பழமையை அறிந்துக் கொள்ள கீழேயுள்ள தகவல்களை கவனிக்கவும்:
  • புத்தர் பிறந்து 100 வருடங்கள் கழித்து தொகுக்கப்பட்டது
  • இயேசு கிறிஸ்து இந்த உலகிலே நடப்பதற்க்கு 300 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது
  • முகம்மது நபி இந்த உலகிலே நடப்பதற்க்கு 900 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது
  • நீங்கள் இந்த உலகிலே பிறப்பதற்க்கு 2300 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது

நற்றிணை இலக்கண முறைப்படி எழுதப்பட்டதால் தமிழின் பழமையை அறிந்துக்கொள்ளலாம். ஒரு மொழி உருவாகி, பேசப்பட்டு, எழுதப்பட்டு, பண்படுத்தப்பட்டு, அதன் பிறகு இலக்கணம் எழுதப்பட பல ஆயிரம் வருடங்களாகும்! அதன் பிறகே இந்தப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் படிக்க இங்கே போகவும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஐங்குறுனூறு - அறிமுகம்

ஐங்குறுனூறு என்றால் 500 சிறிய பாடல்கள் என்று பொருள். இதன் பாடல்கள் ஆசிரியப்பா என்னும் இலக்கண வகையை சார்ந்தது. ஐங்குறுனூறு மூன்றாம் சங்க காலத்தைச் சேர்ந்தது. இதன் காலம் கி.மு. 300 இருந்து கி.பி. 200 வரை.

இது ஒரு தொகுக்கப்பட்ட நூல். தொகுக்கப்பட்டது (collected and arranged) என்பது ஒரு முக்கியமான தகவல். பாடல்கள் எழுதப்பட்டு பல காலங்களுக்கு பிறகு, ஒருவரால் தொகுக்கப்பட்டது. இதனால் எழுதப்பட்ட காலம் மேலும் பின்னோக்கிச் செல்கிறது.

ஐங்குறுனூறு தொகுக்கப்பட்ட காலத்தின் பழமையை அறிந்துக் கொள்ள கீழேயுள்ள தகவல்களை கவனிக்கவும்:
  • புத்தர் பிறந்து 100 வருடங்கள் கழித்து தொகுக்கப்பட்டது
  • இயேசு கிறிஸ்து இந்த உலகிலே நடப்பதற்க்கு 300 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது
  • முகம்மது நபி இந்த உலகிலே நடப்பதற்க்கு 900 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது
  • நீங்கள் இந்த உலகிலே பிறப்பதற்க்கு 2300 வருடங்களுக்கு முன்னால் தொகுக்கப்பட்டது

ஐங்குறுனூறு இலக்கண முறைப்படி எழுதப்பட்டதால் தமிழின் பழமையை அறிந்துக்கொள்ளலாம். ஒரு மொழி உருவாகி, பேசப்பட்டு, எழுதப்பட்டு, பண்படுத்தப்பட்டு, அதன் பிறகு இலக்கணம் எழுதப்பட பல ஆயிரம் வருடங்களாகும்! அதன் பிறகே இந்தப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் படிக்க இங்கே போகவும்.