ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஐங்குறுனூறு - வேழப்பத்து - மனை நடு வயலை

பாடல் 11 : கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வருத்தம்!


மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே.


வீட்டிற்கு அருகில் நட்டு வைக்கப்பட்டுள்ள வயலைக் கொடி
தூரத்தில் உள்ள வேழ மரத்தை சுற்றிப்படரும்
நீர்த்துறை உள்ள ஊர்காரன் என்னை ஏமாற்றியது
யாருக்கும் தெரியக்கூடாது என்று
வெட்கம் கொண்டு
நான் அவனை நல்லவன் என்று சொன்னாலும்,
வருத்ததினால் மெலிந்த என் தோள்கள் காட்டிக்கொடுத்துவிடும்!



வயலைக்கொடி, பசலைக்கொடி
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/dc/Vayalai_with_fruits.JPG

வேழம், மூங்கில்
https://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Bambusa_bamus.JPG

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக